மாரண்டஹள்ளி அருகே கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே சரக்கு வாகனம் மோதி கறவை மாடு பலி. டிரைவர் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கணவன அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள் (வயது.35) இவரது வீடு கணவள்ளி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது.
இவர் 8 மாதம் சினையாக உள்ள கறவை மாட்டை வீட்டின் முன்புறம் கட்டியிருந்தார்,
நேற்று காலை பாலக்கோட்டிலிருந்து பெல்ரம்பட்டி நோக்கி மினி சரக்கு வாகனத்தை அமானி மல்லாபுரத்தை சேர்ந்த கார்த்திக் (வயது. 20) என்பவர் ஓட்டி வந்தார்,
கணவனஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது சரக்குவாகனம் கட்டுபாட்டை இழந்து கறவை மாட்டின் மீது மோதி அருகில் இருந்த மரத்தில் முட்டி நின்றது.
இதில் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கறவை மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தது, மேலும் இந்த விபத்தில் டிரைவரின் இரண்டு கால்எலும்புகளும் முறிந்தன. அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108ஆம்புலன்ஸ் மூலம் டிரைவரை மீட்டு தர்மபுரி அரசுமருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த மாரண்டஅள்ளி போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.