மதுரையில் காவலர்களின் தாகம் தணித்த பத்திரிகையாளர்கள்
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் அதிகம் நீர் பருக வேண்டும். மண்பானை நீரில் கனிம சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உண்டாகும் பருவக்கால நோய்களை தீர்க்க இது உதவும். எனவே அனைவரும் மண்பானை நீரை பருக வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் மதுரை மாவட்டம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு மண்பானை வழங்கினர்
இதில் போலீஸ் இ நியூஸ் நண்பர்களும், மற்ற பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.