Police Recruitment

பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழ்நாடு மதுபானமாக மாற்றி விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழ்நாடு மதுபானமாக மாற்றி விற்பனை செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கடந்த 08.04.2024-ந்தேதி திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர் ரோட்டில் உள்ள தனியார் பாரில் போலி மதுபானம் விற்பனை செய்வதாக பெறப்பட்ட தகவலின்பேரில் காவல்துறையினர் சோதனை செய்ததில் புதுச்சேரி காரைக்கால் பகுதியை சேர்ந்த கார்த்தி (எ) காரைக்கால் கார்த்தி வயது 34, த.பெ.சவரிராஜன் மற்றும் மூன்று நபர்கள் சேர்ந்து பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்து தமிழக அரசு டாஸ்மாக் மதுபானம் போன்று பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரிய வந்ததால், எதிரிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டும், மேலும் அவர்களிடமிருந்து ரூ.77,612/- மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் போலி லேபிள்கள் கைப்பற்றபட்டன.
மேலும் விசாரணையில் கார்த்தி (எ) காரைக்கால் கார்த்தி என்பவர் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பாண்டிச்சேரி மதுபானத்தை வாங்கி தமிழக மதுபானமாக மாற்றி விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று போலி மதுபான விற்பனை செய்யும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.