
சிவகங்கையில் மக்களின் மனதில் இடம் பிடித்த காவல் ஆய்வாளர்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காவல் நிலையத்தில் பணி புரியும் காவல் ஆய்வாளர் திரு. ஆடிவேல் அவர்கள் மிக சிறப்பாக செயல் பட்டு வருகிறார்.
இப்போது காளையார் கோவில் பகுதிகளில் குற்றங்கள் குறைந்து வருகிறது ரவுடிசம், மது, போதை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு வருகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கையை சுற்றியுள்ள கிராமங்களில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறின அதனால் பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியது அவ்வப்போது பரபரப்பான கொலை சம்பவங்களும் நடந்தேறின. .குற்றச்சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது
காளையார் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளராக ஆடிவேல் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு குற்றச் சம்பவங்கள் குறைந்து மக்கள் மன நிம்மதியோடு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்களை பணியிடம் மாற்றம் செய்யப் போவதாக தகவல் வெளிவந்துள்ளதாக தெரிகிறது இதனால் இந்தப் பகுதி மக்கள் மனதில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது எனவே காவல் ஆய்வாளர் ஆடிவேலை பணியிட மாற்றம் செய்யாமல் மீண்டும் அவர் பதவியில் ஓராண்ட காலமாவது காளையார்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிய வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.
