Police Recruitment

சினிமா ஹீரோவை மிஞ்சிய, நிஜ ஹீரோ, தனியாக திருடர்களை பிடித்து மக்கள் பாராட்டுகளை பெற்ற சார்பு ஆய்வாளர்

சினிமா ஹீரோவை மிஞ்சிய, நிஜ ஹீரோ, தனியாக திருடர்களை பிடித்து மக்கள் பாராட்டுகளை பெற்ற சார்பு ஆய்வாளர்

சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த திருடர்களை சார்பு ஆய்வாளர் ஒருவர் ரிஸ்க் எடுத்து அவர்களை தனிஆளாக பிடித்து கைது செய்து நிஜ ஹீரோவானார்.

சென்னையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன, சாதாரணமாக பைக்கில் வந்து நடந்து செல்லும் நபர்களின் கையில் இருக்கும் செல்போனை பறித்து செல்ல ஒரு கும்பலே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள பகுதி ஒன்றில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் திருட்டு பைக்கில் தப்பிக்க முயன்ற போது சார்பு ஆய்வாளர் ஆண்டிலின் ரமேஷ் அவர்கள், அவர்களை துரத்திச் சென்று பிடித்துள்ளார். முதலில் ஒருவரை பிடிக்க, அவரை வைத்து 3 பேரை பிடித்து கைது செய்துள்ளார். அந்த திருடனின் கையில் ஆயுதம் உள்ளதா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் லாவகமாக அந்த திருடனை பைக்கிலிருந்து அப்படியே ஹெல்மெட்டைப் பிடித்து இழுத்து பிடித்துள்ளார்.

இந்தசம்பவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் , இது எந்த படத்தில் இருந்தும் எடுக்கப்பட்ட காட்சி இல்லை, ஆனால் நிஜ வாழ்கை ஹீரோ சப் இன்ஸ்பெக்டர் தனி ஆளாக துரத்தி போன் திருடும் நபர் திருட்டு பைக்கில் சென்ற போது பிடித்துள்ளார். அதோடு 3 பேரை கைது செய்ததோடு11 திருட்டு செல்போன்களையும் கைப்பற்றியுள்ளார். என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அதன் சிசிடிவி காட்சிகளையும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.