இளநீர் கடையில் திருடிய 2 பேர் கைது
மதுரை முத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் வயது (32) இவர் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இளநீர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.மறுநாள் வந்து பார்த்தபோது கடையில் இருந்த ரூ. 2000 திருடு போனது தெரியவந்தது. இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த யாசின் முகமது அலி வயது (28) ஜெயசூர்ய பிரகாஷ் வயது (23) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் இரண்டு பேரும் டி.வி.எஸ் நகரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.