
மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது (51) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் குடும்ப செலவுக்காக கண்ணணேந்தலை சேர்ந்த வினோத்குமாரிடம் வயது (42) ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1.20 லட்சம் வரை அசல் வட்டியுடன் சேர்த்து முத்துலட்சுமி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி குடிபோதையில் அவரது கடைக்கு சென்ற வினோத்குமார் தனது டூவீலரில் தள்ளு வண்டியை இடித்து தள்ளியதுடன் முத்துலட்சுமி அவரது மகன் ஆனந்த கண்ணனை தாக்கியதாக தெரிகிறது. மேலும் முத்துலட்சுமியிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துலட்சுமி புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிந்து வினோத் குமாரை கைது செய்தனர்.
