


நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரியில் பார்வையிட்ட காவல் ஆணையர்
வருகின்ற(04.06.2024) அன்று நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மதுரையில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தனர். மதுரை மாநகர காவல் துணை ஆணையர்கள் உடன் இருந்தனர்.
