
மதுரையில் கைதி தப்பி ஓட்டம்
மதுரையில் மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விசாரணை கைதி போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார். மதுரை எஸ். எஸ் காலனி பகுதியைச் சேர்ந்த தீபன் வயது (25)உட்பட இருவர் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். நீதிமன்றம் விடுமுறை என்பதால் இருவரையும் மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்த எஸ்.எஸ் காலனி போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் பிடியிலிருந்து தீபன் தப்பி ஓடி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
