
தற்காப்பு உரிமை ஆரம்பிக்கும் மற்றும் நீடிக்கும் காலம்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு102 (IPC Section 102)
நம்முடைய உடலுக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்ற அச்சம் எப்போது நமக்கு தோன்றுகிறதோ அந்த நேரத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளும் உரிமையும் நமக்கு கிடைக்கிறது.
நம் உடலுக்கு தீங்கு செய்யக்கூடிய குற்றத்தை எதிரி புரியாவிட்டாலும் புரிவதற்கான முயற்சியை அல்லது மிரட்டலை அவன் மேற்கொண்டாலே போதும். நம்மை பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கையை நாம் உடனே மேற்கொள்ளலாம். உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையின் தொடக்கம் மற்றும் தொடர்ச்சி உடலின் தனிநபர் தற்காப்பிற்கான உரிமையானது, குற்றத்தைப் புரிவதற்கான ஒரு முயற்சி அல்லது அச்சுறுத்தலிலிருந்து உடலின் ஆபத்திற்கான நியாமான எதிர்பார்ப்பு அச்சம் ஏற்பட்ட உடனேயே, அக்குற்றம் புரியப்பட்டிருக்காவிட்டாலும்கூட, தொடங்குகிறது;மற்றும், உடலின் ஆபத்திற்கான அத்தகைய எதிர்பார்ப்பு அச்சம் தொடர்கிற வரையில், அது தொடர்கிறது.
