Police Recruitment

மதுரை நகரில் போலீஸ் குடும்பங்களை தத்தெடுத்த ஏழு கல்லூரிகள்

மதுரை நகரில் போலீஸ் குடும்பங்களை தத்தெடுத்த ஏழு கல்லூரிகள்

மதுரை நகரில் ஏழு போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர் சில குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே போலீசாக உள்ளனர் அக் குடும்பங்களில் குழந்தைகளை கண்காணிப்பது என்பது மிகவும் சிரமமாக உள்ளது இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்ல நேரிடுகிறது இது குடும்பத்தின் பெரிய பிரச்சினையாக உருவாக வழி வகுக்கிறது

இதை தவிர்க்க கமிஷனராக டேவிட்சன் இருந்த போது ஆனந்தம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது

இத்திட்டத்தில் மதுரையில் உள்ள ஏழு கல்லூரிகளில் மாணவர்களுக்கு 7 போலீஸ் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.

இவர்கள் உளவியல் சமூகவியல் படித்தவர்கள் கல்லூரி முடிந்தும் விடுமுறை நாட்களிலும் போலீஸ் குடும்பங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தனர் பள்ளி செல்ல மறுத்த குழந்தைகளை படிக்க வைத்தனர் வீடுகளில் குழந்தைகக்கு டியூசன் எடுத்தனர் இது நல்ல பலனை தந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானது அதன் பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் மீண்டும் ஆரம்பிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக நேற்று கமிஷனர் லோகநாதனை போலீசருக்கான மன நலத்திட்டம் நோடல் அலுவலர் டாக்டர் சி ராமசுப்பிரமணியம் ஏற்பாட்டில் துணை அலுவலர் பேராசிரியர் கண்ணன் சந்தித்து பேசினார். விரைவில் இத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட உள்ளது .

Leave a Reply

Your email address will not be published.