


மதுரை மாநகரில் காவல்துறையில் மாநகராட்சி 100 வார்டுகளில் காவல்துறையினர் – பொதுமக்களை இணைக்கும் வகையில் WHATSAPP குழுக்கள் உருவாக்கம்
இன்று 04.09.2024 தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் அலுவலகத்தில், மதுரை மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் குற்றசெயல்களை தடுக்கும் பொருட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரை இணைக்கும் வகையிலான WHATSAPP குழுக்களை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப. அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.
இந்த WHATSAPP குழுக்களில் அந்தந்த காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள், குடியிருப்பு நலசங்க நிர்வாகிகள், அரசு துறையில் பணிபுரிவோர், கிராம நிர்வாக அலுவலர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் இடம்பெற்றிருப்பார்கள் எனவும் வாட்ஸ் அப் குழுக்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் சமூக விரோதிகள் நடமாட்டம் போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பான தகவல்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய தகவல் தெரிவிக்கலாம் எனவும் வணக்கம் மற்றும் வாழ்த்து செய்திகள் அரசியல் பதிவுகள், ஜாதி மதங்களுக்கு எதிரான பதிவுகளை பகிர கூடாது எனவும் பொதுமக்கள் ஏதேனும் ரகசிய தகவல்களை WHATSAPP அட்மின் மூலமாக தனியாக அனுப்பலாம் எனவும் ஒவ்வொருவரின் தகவலும் ரகசியம் காக்கப்படும் எனவும் காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்தார்கள்
இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் தெற்கு வடக்கு. போக்குவரத்து மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்
