ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை கடத்தியவர்கள் கைது காவலர்களைப் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கடந்த 28.08.2024-ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட ரேசன் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 50 டன் எடையுள்ள 960 அரிசி மூடைகளை இரண்டு லாரிகளில் கடத்திச் சென்றது தொடர்பாக இராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரி ஓட்டுநரை கைது செய்து, இரண்டு லாரிகள் மற்றும் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர்.
விரைவாக செயல்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூடைகளை பறிமுதல் செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.