திண்டுக்கல் மாவட்டத்தில் காவலர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்திய காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள்
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு (12.09.2024) இன்று வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம்- ஒழுங்கு)
திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்., இ.கா.ப., அவர்களுக்கு திண்டுக்கல் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள்.
இதனையடுத்து (திண்டுக்கல் சரகம்) திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப்., இ.கா.ப அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.R.சிவ பிரசாத்., இ.கா.ப., அவர்கள் இருந்தார்கள்.*
ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுக்கு சட்டம் ஒழுங்கு, குற்ற தடுப்பு நடவடிக்கைகள், குற்றப் புலனாய்வுகள், நீதிமன்ற உத்தரவுகள், பொதுமக்களுடன் காவல்துறையினரின் அணுகுமுறை குறித்தும், காவல் நிலையத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை முறைகள் குறித்தும் எடுத்துக் கூறி தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம்-ஒழுங்கு)
திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்., இ.கா.ப. அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்கள்.