மக்களின் மனதில் இடம் பிடித்த சார்பு ஆய்வாளர்
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக கார்திகேயன் பொறுப்பேற்ற உடன் எவ்வித குற்ற சம்பவங்களும் நடக்காமல் காளையார்கோவில் காவல் நிலையத்தை கட்டுக் கோப்பாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. சார்பு ஆய்வாளர் கார்த்தியகேயன் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வரும் நபர்களிடம் அன்பாக பேசி கண்ணியமாக நடந்து கொள்ளுவார் இந்த நிலையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். பொதுமக்களின் நன்மதிப்பை பெற்ற சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் அவர்களை மீண்டும் காளையார் கோவில் காவல் நினையத்தில் பணி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்பாக உள்ளது.