பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் முட்புதரில் மறைத்து வைத்திருத்த நாட்டு துப்பாக்கியை மீட்டு போலீசார் விசாரணை .
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பொரத்தூர் கிராமத்தில் முருகன் என்பவரின் நிலத்திற்க்கு அருகில் உள்ள முட்புதரில் நாட்டுத் துப்பாக்கி இருப்பதாக பி.செட்டி அள்ளி வி.ஏ.ஒ. மாதேஸ் பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கியை மீட்டு,
பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர், அதில் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியானது வனப்பகுதி என்பதால் இரவு நேரங்களில் வனவிலங்குகளை வேட்டையாட இவ்வகை துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்தி வருவதாகவும், யாருக்கும் தெரியாமல் இருக்க முட்புதரில் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
நாட்டு துப்பாக்கி மூலம் காட்டு விலங்குகளை வேட்டையாடும் மர்ம நபர்களை பாலக்கோடு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.