Police Department News

மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் ஆகிய 3அதிகாரிளை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து அதிரடி நடவடிக்கை.

மதுரையில் GST வரியை குறைப்பதற்காக 3.5 லட்சம் லஞ்சம் பெற்றபோது GST துணை ஆணையர் மற்றும் 2 சூப்பிரண்டுகள் ஆகிய 3அதிகாரிளை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்து அதிரடி நடவடிக்கை.

மதுரையை சேர்ந்தவர் கார்த்திக் இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு பிரிவில் துணை கமிஷனராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார். ஜி எஸ் டி வரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு ரூ.3.50 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்தத் தொகையை கார்த்திக் கொடுக்க விரும்பவில்லை இது தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படியும் நேற்று இரவு பிபி குளம் அலுவலகத்தில் வைத்து ரூ. 3.50 லட்சத்தை அந்த அலுவலகத்தில் பணி புரியும் கண்காணிப்பாளர்கள் அசோக் குமார், ராஜ்பீர் ராணா ஆகியோர்களிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரி கலைமணி இன்ஸ்பெக்டர் சரவணன் குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் இந்த தொகையை துணை கமிஷனர் சரவண குமாருக்காக வாங்க சொன்னது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மதுரை GST அலுவலகத்தில் வைத்து மூன்று பேரிடமும் விசாரணை நடந்தது.

கார்த்திக்கிடம் ஜிஎஸ்டி பாக்கியியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது இதன்பின் மதுரை சிபிஐ ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர் இதை தொடர்ந்து மூன்று பேரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

துணை ஆணையர் சரவணகுமாரின் வீடு அமைந்துள்ள தஞ்சாவூரமாவட்டம் திருவிடைமருதூரில் சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர்கள் காரில் வந்து வீட்டை சோதனை செய்வதற்காக காத்திருக்கின்றனர்.

வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் வீடு திறக்கப்பட்டதும் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.