காவல் ஆய்வாளர் அவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தீ விபத்து தடுக்கப்பட்டது
தென்காசி மாவட்டம் சிவராமண் பேட்டையில், அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் லோடு கொண்டு வந்த லாரியின் டயர் திடீர் என வெடித்தது இதனால் வெடித்து தீ பிடித்து வேகமாக எரிய ஆரம்பித்தது தகவல் அறிந்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் இலத்தூர் உதவி ஆய்வாளர் ஆகியோர் சிவராம பேட்டைக்கு சென்று தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர், தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் இதன் மூலம் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தீ விபத்து தடுக்கப்பட்டது.
இந்த முன்னெச்ரிக்கை நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.