மதுரை மாநகர காவல் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
இன்று (13.01.2025 ) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாநகர காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.