ஆயுதங்களுடன் இருவர் கைது
மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் மதுரை கூடல்நகர் குட் செட் பகுதியில் கூடல்புதூர் எஸ்ஐ கணேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் வாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த சதீஷ்குமார் வயது 24 ஆணையூரை சேர்ந்த அலெக்ஸ் குமார் வயது 40 என்பதும் அப்பகுதி வழியாக வருவோரிடம் வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது இதை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்