காரில் கடத்திய 495 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மதுரை தெப்பக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் பாண்டியன் நகர் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து காரில் இருந்த 495 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் இது தொடர்பாக காரில் வந்த ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ் குமார் வயது 25 தினேஷ்குமார் வயது 29 ஆகியோரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து மூன்று செல்போன்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.