மதுரையில் தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்
மதுரை மாநகரில் உள்ள 263 கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (28.01.2025) மாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்ட துவக்க விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலியின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாணவியர்களுக்கு சிறப்புற எடுத்துரைத்தார். உடன் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (வடக்கு) ஆகியோர் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் உதவி ஆணையர், காவல் உதவி ஆணையர், காவல்துறையினர் மற்றும் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் கல்லூரி மாணவியர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகரில் இத்திட்டத்திற்காக பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்பு பயிற்சி பெற்ற 95 பெண்காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டது.