ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு
மதுரை மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 106 வது பேட்ஜ் ஊர்க்காவல் படையை சேர்ந்த 62 (ஆண்- 46,பெண்-16) வீரர்களுக்கான அடிப்படை கவாத்து பயிற்சிகள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 25.11.2024 முதல் 22.01.2025 வரை நடைபெற்றது. அதன் நிறைவு நாளான இன்று ஊர்க்காவல் படையினரின் (passing out) கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர் அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் பணியில் சிறப்புடன் செயல்பட தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.