
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் தனிப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான பாலா என்ற பல்லு பாலா, த/பெ ரவி ஓடைப்பட்டி, 2.குண்டுமணி பாலா த/பெ வைரவநாதன், ஜீவா நகர், மதுரை, 3.பாண்டி செல்வம், த/பெ ஆனைமுத்து கருப்பாயூரணி, 4. முத்தையா சந்திரன் த/பெ நாகமலை கணேசன், ஆணையூர், 5. கோபி என்ற கோகுல் த/பெ பாலச்சந்திரன், ஒத்தக்கடை ஆகி எதிரிகளைச் கைது செய்து அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆட்டோக்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். மேற்படி எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
