
விதி அறிந்து விழிப்புடன் இருந்தால் விதியையும் வென்றுவிடலாம் (உயிர் காவலன்)
எமதர்மனும் சித்திரகுப்தனும் உயிர் பறிக்கும் தங்களது பணியில் கவனமாக பேசி கொண்டு இருக்கின்றனர்
சித்திரகுப்தா இன்று நாம் உயிர் பறிக்க போகும் நபர் யார்?
பிரபு,அவன் பெயர் சரவணக்குமார் வயது 26 இவருக்கு மனைவி ஒரு குழந்தை இருக்கிறார்கள்
அவனின் உயிரை எடுக்கும் நேரத்தை கூறு
இன்று காலை 10 மணிக்கு பிரபு
இப்போது மணி 9.50 இன்னும் 10 நிமிடத்தில் உயிரை எடுத்து விடலாம்
பாவம் பிரபு 2 வயது பெண் குழந்தை, இளம் வயது மனைவி கணவனின் இழப்பு அந்த குடும்பத்தையே பாதிக்கும்
அது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை அவன் விதி முடிந்து விட்டது அவனை காப்பாற்ற யாராலும் முடியாது. இரக்கப்பட்டு நீ ஏதாவது செய்து விடாதே
பிரபு அவன் வீட்டை விடு புறப்பட்டு விட்டான் உடன் மனைவி குழந்தையும் வருகின்றனர் பாவம் பிரபு
விபத்து என்றால் அடி விழத்தான்செய்யும் அதற்கெல்லாம் நாம் ஒன்றும் செய்யமுடியாது இன்னும் 10 நிமிடம்தான் அவன் கதை குளோஸ்
பிரபு அவன் வீட்டைவிட்டு புறப்பட்டு இருசக்கர வாகனத்தில் தன் மனைவி குழந்தையுடன் வந்து கொண்டு இருக்கிறான்
பிரபு அவன் ஹெல்மட் அணியவில்லை போனில் பேசியபடி வந்து கொண்டு இருக்கிறான்
சபாஷ் சூப்பர் அல்வா சாப்பிட்ட மாதிரி விபத்தில் அடித்து தூக்கினால் தப்பவே முடியாது. இன்னும் 10 நிமிடத்தில் அவன் குளோஸ்!
நேரம் கடந்து கொண்டு போகிறது
மணி 10.10
சித்திரகுப்தா என்னா ஆச்சு நீ எதாவது செய்து விட்டாயா
நான் ஒன்றும் செய்யவில்லை பிரபு அங்கே பாருங்கள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவனை நிறுத்தி அவனுக்கு வாகனம் ஓட்டும் போது போனில் பேச கூடாது என்றும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி அவனது உயிரை காப்பாற்றியது அந்த காவலர்தான் நமது பணியை தடுத்ததும் அந்த காவலர்தான் பிரபு
அப்போ காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பது உண்மைதானா?
இல்லை பிரபு அதையும் தாண்டி மக்களின் உயிர் காக்கும் காவலர்களாக மாறி விட்டனர்.
சித்திரகுப்தா விதிகளை தெரிந்து கொண்டு அவற்றை பின்பற்றினால் விதியையும் வென்று விடலாம் என்று போலிஸ்காரர்கள் நிருபித்து விட்டார்கள்
