
செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டம் முழவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைவிற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் அவர்கள் மேற்பார்வையில் செங்கோட்டை வட்ட காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளிதரன் மற்றும் தலைமை காவலர் ராஜா சிங், அல்போன்ஸ்ராஜ், வடிவேல் மற்றும் கணேஷ் குமார் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்து செய்த போது பெங்களுரில் இருந்து கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட புகையிலைகொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி செங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஆலங்குளத்தை சேர்ந்த கலைச்செல்வம் 40,
s/o பால் துரை
என்பவரை விசாரித்த அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை மூன்று மூடைகளை கேரளாவிற்க்கு விற்பனை செய்ய பஸ்ஸில் கொண்டு செல்ல நின்றதாக கூறியவரை கைது செய்தும் புகையிலையை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவருக்கு ஆலங்குளம் காவல் நிலையத்திலும் இதே போன்ற வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
