
சிறப்பாக பணியாற்றிய மதுரை காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருதுகள்
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் உத்கிரிஷ்ட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது
அதன்படி இந்த பதக்கத்துக்கு மதுரை மாநகர் காவல் துறையில் காவல் கூடுதல் துணை ஆணையர் போக்குவரத்து திட்டமிடுதல் திருமலை குமார் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்தர், தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஹேமமாலா ஆகியோர் தேர்வு பெற்றனர்.
இவர்களுக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் பதக்கம் வழங்கி பாராட்டினார்
அப்பொழுது போலீஸ் கமிஷனர் கூறுகையில் காவல்துறையின் மெச்சதகுந்த பணிக்காக வழங்கப்படும் விருது மேலும் பணியில் உத்தியோகத்தை ஏற்படுத்தும் விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் இந்நிகழ்வில் காவல்துறை துணை ஆணையர் தலைமையிடம் ராஜேஸ்வரி மற்றும் தல்லாகுளம் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
