
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கான காவல் கரங்கள் திட்டம் துவக்க நிகழ்ச்சி
இன்று 26.03.2025 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில், பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் அனாதைகளாக உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள வயதான ஆதரவற்ற முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கி இச் சமூகத்தில் தாங்களும் பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்த்தியும் அவர்களுக்கு நிறைவான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அவர்களை காப்பகங்களிலும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பொருட்டு
காவல் கரங்கள் என்ற புதிய திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மதுரை மாநகரில் 40 ஆதரவற்ற முதியோர் காப்பகங்கள் துணையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு முன்னோட்டமாக துவக்கி வைக்கப்பட்ட இவ்விழாவில் இதுவரை 38 ஆதரவற்ற முதியவர்கள் மீட்கப்பட்டு அதில் 24 பேர் காப்பகங்களிலும் 11 பேர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த 03 முதியோர்களின் உடல்களை மீட்டு காவல் கரங்கள் அமைப்பின் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் வடக்கு தெற்கு மற்றும் தலைமை இடம் மற்றும் காப்பகங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் காவல் கரங்கள் அமைப்பு தொடர்பு கொள்ள வேண்டிய டோல் ஃப்ரீ பதாகைகள் வழங்கப்பட்டது.
