
சென்னையில் செயின் பறிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவல் ஆய்வாளருக்கு பாராட்டு
சென்னையில் நடந்த தொடர் செயின்பறிப்பு வழக்குகளில் திறம்பட செயல்பட்டு 2 குற்றவாளிகளை விமான நிலையத்தில் கைது செய்த விமான நிலையம் காவல் ஆய்வாளர் திரு.பாண்டி அவர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
