
பணம் திருடிய வாலிபர் கைது
மதுரை செல்லூர் சுயராஜ்யபுரம் நான்காவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் செல்வம் வயது 30 இவர் நரிமேடு பிடி ராஜன் ரோட்டில் ஏசி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார் 28ஆம் தேதி காலையில் கடை திறந்த போது பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூபாய் இரண்டு ஆயிரம் பணம் மற்றும் ரூபாய் 25000 மதிப்புள்ள உதிரி பாகங்களும் திருடப்பட்டிருந்தது இது குறித்த புகாரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரிமேடு கட்டபொம்மன் நகர் போஸ் வீதி சதீஷ்குமார் வயது 35 என்பவரை கைது செய்தனர்.
