
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பெண்ணிடம் செல்போன், பணம் பறிப்பு
வடமதுரை அருகே கோவககவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ரீட்டா (வயது35). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென அவரை கீழே தள்ளி விட்டனர்.
இதையடுத்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து ரீட்டா வடமதுரை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
