
மதுரையில் திருடுபோன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு மற்றும் மாபெரும் குறைதீர்ப்பு முகாம்
இன்று 09/04/25 மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் காவல் ஆணையர் திரு. J.லோகநாதன் I.P.S., அவர்களது தலைமையில் நடைபெற்றது
மதுரையில் பல்வேறு பகுதியில் திருடு போன அலை பேசிகளை சைபர் கிரைம் போலிசாரின் உதவியுடன் மீட்க்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் காவல் துணை ஆணையர் வடக்கு, காவல் துணை ஆணையர் தெற்கு, காவல்துணை ஆணையர் தலைமையிடம்,காவல் துணை ஆணையர் போக்குவரத்து, கூடுதல் துணை ஆணையர் (CWC) ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது
மற்றும் இந்த நிகழ்வுடன் நடைபெற்ற மாபெரும் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அனைத்து உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு
தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
மனுக்களை விசாரணை செய்தார்கள் மேலும் மீட்கப்பட்ட அலைபேசிகளும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன மதுரை மாநகர் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன்
செல்போன்கள் மீட்கப்பட்டன அவற்றில் கோவில் சரகம் 27, தெற்கு வாசல் சரகம் 5, திருப்பரங்குன்றம் சரகம் 14, திடீர் நகர் சரகம் 46, திலகர் திடல் சரகம் 21, தல்லாகுளம் சரகம் 104, செல்லூர் சரகம் 7, அண்ணாநகர் சரகம் 54 ஆக மொத்தம் 278 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
பொது மக்கள் குறைதீர்ப்பு முகாமில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட மனுக்கள் 56 ம் குடும்பத் தகராறு சம்பந்தப்பட்ட மனுக்கள் 38 வாய் தகராறு சம்மந்தப்பட்ட மனுக்கள் 62 மற்றும் பிற மனுக்கள் 38 என மொத்தம் 194 மனுக்கள் பெறப்பட்டு முறையாக விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது.
