
ஆட்டோவில் கஞ்சா கடத்தியவர் கைது
மதுரை ஜெய்ஹிந்த் புரம் ராமையா காலனி ரோட்டில் எஸ்ஐ திரு அழகு பாண்டி தலைமையில் போலீசார் அருள்குமரன் கண்ணன் ஆகியோர் வழியாக வரும் வாகனங்களை தணிக்கை செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டபோது ஆட்டோ டிரைவர் முன்னுக்கு பின்னாக பேசி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோ சீட்டுக்கு அடியில் சோதனை செய்தபோது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது இதனை அடுத்து ஆட்டோ டிரைவர் நேரு நகரைச் சேர்ந்த குமரவேல் வயது 43 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
