சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும்,ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தல்
ஒவ்வொரு சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விசாலெக்ஷிமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடை வைத்துள்ளேன் இதற்கு தடையின்மை சான்று கேட்டு பழனி நகர் காவல் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தேன் இது வரை சான்று வழங்கவில்லை. எனவே தடையின்மை சான்று விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார், இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை வழக்கு நிலுவையில் இருப்பதால் அவருக்கு இதுவரை தடையில்லா சான்று வழங்கவில்லையென நகர் காவல் ஆய்வாளர் கூறினார் இதனை தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரரரின் மனுவை நிராகரிக்கவில்லை எந்தவித பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை இது போலிசாரின் மந்தமான செயலை காட்டுகிறது. ஒவ்வொரு சாதாரண குடிமகன் மனுவிற்கும் போலிசார் எந்த விதத்திலும் பதிலளிக்க வேண்டும் ஆனால் பதிலளிக்காமல் கிப்பில் வைத்திருப்பது கூடாது. இது போன்ற நடவடிக்கை பொறுப்பற்ற முறையை காட்டுகிறது. ஒவ்வொரு ஏழை குடிமகனும் அதிகம் செலவிட்டு நீதிமன்றத்தை நாடமுடியாது ஆடல் பாடல் கலாச்சார நிகழ்ச்சிக்கு கூட நீதிமன்றத்தின் உத்தரவை பெற வேண்டும் என்ற போலிசாரின் அணுகுமுறை தேவையற்றது. எனவே மனுதாரரின் மனுவை திண்டுக்கல் எஸ்.பி.,10 நாட்களில் பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.