
புகையிலை பறிமுதல்
மதுரை செல்லூர் எஸ்,ஐக்கல் ராஜேஷ்மற்றும் ஆதிராஜா ஆகியோர் வெவ்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு பெட்டிக்கடைகளில் சோதனை நடத்திய போது கூலிப் உள்பட தடை செய்த புகையிலை 139 பாகெட்டுகள் இருந்தன இது தொடர்பாக தெய்வம் வயது 55 என்பவரை போலீசார் கைது செய்தனர் அதுபோல மற்றொரு கடையில் சோதனை செய்தபோது 155 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தன இது தொடர்பாக வில்லாபுரம் சிவக்குமாரை ( 42 )கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 294 தடை செய்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
