
பெண்ணிடம் தங்க நகை பறிப்பு இளைஞர் கைது
மதுரை அவனியாபுரம் பகுதியில் பெண்ணிடம் தங்க நகையை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவனியாபுரம் நாகப்பா நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த 4ம் தேதி வீட்டுக்கு நடந்து சென்றபோது புதர் மறைவில் இருந்த இளைஞர் அந்தப் பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அவனியாபுரம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது வளையங்குளம் பகுதியைச் சேர்ந்த நல்லு முருகன் வயது 23 என்பது தெரிய வந்தது இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து நல்லு முருகனை கைது செய்தனர் மேலும் சின்ன உடைப்பு பகுதியில் அவர் மண்ணில் புதைந்து வைத்திருந்த தங்க நகையை பறிமுதல் செய்ய முயன்ற போது போலீசாரிடமிருந்து நல்லுமுருகன் தப்ப முயன்றார் அப்போது அங்குள்ள பாலத்திலிருந்து குதித்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது போலீசார் அவரை பிடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
