
ஆயுதத்துடன் வாலிபர் கைது
மதுரை தெப்பக்குளம் போலீஸ் எஸ்ஐ ரமேஷ் குமார் அவர்கள் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள டோபி காலனி வழியாக போலீசாருடன் ரோந்து பணி மேற்கொண்டார் அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர் அவர் கீரை துறை ஜோடியா முத்தையா பிள்ளை தெரு முருகன் மகன் சரவணக்குமார் வயது 26 என்பது தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிந்து சரவணக்குமாரை கைது செய்தனர்
