
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் பெற்று தந்த மதுரை மாவட்ட காவல்துறை யினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்கோட்டம் உசிலம்பட்டி டவுன் காவல் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய குற்ற எண்: 112/2023, U/s 8(c) r/w 20(b) (ii) (c) 25,29(1) NDPS Act கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 1) சுரேஷ், தனக்கன்குளம் 2) சரவணன், மேலமடை 3) பிரசாத், உசிலம்பட்டி மற்றும் 4) நாகேந்திரன் ஆகியோர்களுக்கு தலா 10 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ1,00,000 அபராதம் விதித்து Madurai Principal EC& NDPS Special Court தீர்ப்பு வழங்கியது
