
மதுரையில் 500 போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது
மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்த 500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
எலிக்ஸிர் பவுண்டேஷன், டூ ஹோம் பைனான்ஸ் சார்பில் 3000 போலீசார் உள்பட மொத்தம் 12000 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது
முதல் கட்டமாக நேற்று மதுரை காமராஜர் சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மதுரை மாநகரில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர்
500 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது மதுரை போலிஸ் கமிஷனர் திரு. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பேசுகையில் மற்றவர்களுக்கு நாமும் முன்மாதிரியாக போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்றார்
மதுரை போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி. வனிதா, போக்குவரத்து கூடுதல் துணை ஆணையர். திருமலை குமார், போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் இளமாறன் செல்வின் மற்றும் போககுவரத்து காவல் ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், நந்தகுமார், சோபனா, பஞ்சவர்ணம், பூரணகிருஷ்ணன், சுரேஷ், தங்கப்பாண்டி, மற்றும் பைனான்ஸ் நிறுவன அதிகாரி ராகவன், பவுண்டேஷன் சார்பில் கார்த்திக் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
