
மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு
கடந்த 12ஆம் தேதி மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அன்று காலை 6:30 மணி அளவில் யானைக்கல் புதுப்பாலத்தின் நான்காவது தூணின் கீழ் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் எந்தவித அசைவும் இன்றி படுத்திருப்பதாக செல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மேற்படி அடையாளம் தெரியாத நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்ததில் மேற்படி நபர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் சம்பவம் பற்றி மதுரை வடக்கு கிராம நிர்வாக அலுவலர் திரு முத்துப்பாண்டி என்பவருக்கு தகவல் கொடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பிரேதத்தை பார்வையிட்டு பின்பு செல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் காவல் நிலைய குற்ற எண் 591/25, u/s 194,படி வழக்கு பதிவு செய்யப்பட்டது மேற்படி நபரின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்த நபர் மதுரை செல்லூர் அஹிம்சாபுரம் நான்காவது தெருவை சேர்ந்த கதிரேசன் பிள்ளை என்பவரது மகன் மாரிக்கண்ணு வயது 45 என தெரிய வந்தது மேற்படி மாரி கண்ணு என்பவர் கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தை பிரிந்து கிடைக்கும் இடங்களில் உணவை உண்டும் ஏதேயினும் ஒரு இடத்தில் படுத்து உறங்கி வாழ்ந்து வந்துள்ளார் என தெரிய வந்தது மேற்படி நபரை பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடந்த 13ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நல்லடக்கம் செய்வதற்காக உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது ஆனால் நாளிதழ்களில் மேற்படி தகவலை மறைக்கப்பட்டு மேற்படி நபர் சித்திரை திருவிழா கூட்டம் நெருசலில் இறந்ததாக தவறாக தெரிவிக்கப்பட்டு இருந்தது எனவே மேற்படி நபர் மாரிக்கண்ணு என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இயற்கையாக மரணம் அடைந்துள்ளார் என்றும் மேற்படி நபரின் மரணத்திற்கும் சித்திரை திருவிழா நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் காவல்துறையின் சார்பாக தெரியப்படுத்தப்படுகிறது
