

காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை ஏற்டுத்த வேண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல் துறை உறுவாக்க வேண்டும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடக்கூடாது. என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார் இந்த விழாவில் பேசிய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்
தமிழக காவல் துறைக்கு குடியரசு தலைவரின் கௌரவ கொடி வழங்ப்பட்டது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இந்த கொடியினை வழங்கினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் பேசியது தமிழக காவல் துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொரிக்கபட வேண்டிய நாளாக இந்த நாள்
அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருக்கிறது காவல் துறையின் செயல்பாடுகள் பாராட்டுக்குறிய வகையில் அமைந்துள்ளது. கடந்த ஓராண்டில் சாதி மத கலவரங்கள் துப்பாகி சூடுகள் இல்லை. காவல் நிலைய மரணங்களே இல்லை என சொல்லவில்லை ஆனால் குற்றங்கள் குறைந்து உள்ளது.
காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை காவல்துறை ஏற்படுத்தி தர வேண்டும். சிறு தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பாலியல் போக்சோ சட்டங்களில் சிக்குபவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடியரசு தலைவரின் கொடியை வழங்கி சிறப்பித்துள்ள துணை குடியரசு தலைவர் திரு வெங்கையா நாயுடுவை கௌரவிக்கிற வகையில்
வரவேற்கிறேன். இந்தியாவில் பல நரங்களிலுள்ள காவல்துறைக்கு முன் மாதிரியானது நமது காவல் துறை
தமிழ்நாட்டு காவல்துறை காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது மிக உயர்ந்த அங்கிகாரம் கிடைத்துள்ளது. அனைத்து காவலர்களுக்கும் கிடைத்துள்ள பெறுமை இது இவ்வாறு அவர் கூறினார்
