Police Department News

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஆறு பேர் கைது

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் மூன்று சிறார் உள்பட ஆறு பேர் கைது

20/05/2025 அன்று அதிகாலை மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்குட்பட்ட மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக மதுரை செல்லூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் தங்கப்பாண்டி என்ற கோல்ட் வயது 22 என்பவர் கொலை செய்யப்பட்டார் இச்சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்

இந்த நிலையில் காவல் துறையினரின் புலன் விசாரணையில் தங்கப்பாண்டி என்பவரை முன்விரோதம் காரணமாக செல்லூர் மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மகன்பிரவீன் குமார் வயது 19 அங்கன் என்பவரது மகன் அவனின்ரன் வயது 19 நரிமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகள் சிவப்பிரியா வயது 19 மற்றும் மூன்று இளம் சிறார்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வரவே மேற்கண்ட அனைவரையும் கைது செய்தும் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியும் இளம் சிறார்களை அரசு கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்க அனுப்பப்பட்டுள்ளது

இவ் வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவலர்களை காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்

Leave a Reply

Your email address will not be published.