
மதுரையில் வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவலர் குறைதீர்க்கும் நாள்
24.05.2025 அன்று மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நடைபெற்ற காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு. ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கியும், காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்ததுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் இன்றைய கவாத்து பயிற்சியின் போது காவலர்களுக்கு, அவசர காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நேரங்களில் கலவர கூட்டங்களை எவ்வாறு கையாளுவது தொடர்பான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
