Police Department News

தாம்பரம் மாநகர காவல் மற்றும்TANSAM-GCC இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் .

தாம்பரம் மாநகர காவல் மற்றும்TANSAM-GCC இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாம் .

தாம்பரம் மாநகர காவல் துறை தமிழ்நாடு அரசின் நிறுவனமானTANSAM(Tamil Nadu Smart Advanced Manufacturing Centre) அமைப்பு மற்றும்GCC(Global Carrier Connect) ஆகியோருடன் ஒருங்கிணைந்து இன்று 03.07.2025ஆம் தேதி OMR சாலையில் உள்ள கைலாஷ் கார்டன் மஹாலில் முக்கியமாக கண்ணகி நகர் ,பெரும்பாக்கம் ,செம்மஞ்சேரி மற்றும் தாம்பரம் மாநகர பகுதிகளிலும் திறன்மிக்க கல்லூரி முடித்த மாணவர்கள்/மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த வேலை வாய்ப்பு முகாம் “பெரும்பாக்கம் Experiment-ன் ஒரு பகுதியாகும்”.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் D.mart A2B Hotels,TVS Lukas ,TVS motors,Shoba Builders,Bhidar AL-Mulla-Kuwait உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10 வகுப்பு முதல் 12ம் வகுப்பு, ITI, Diploma, இளங்கலை பட்டதாரிகள்,, Nursing மற்றும் Hotel management உள்ளிட்ட பல்வேறு கல்வி தகுதி படைத்த 18 வாழ்த்திற்கு மேற்பட்ட மொத்தம் 281 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 1 இளைஞர்கள் வெளிநாட்டிலும் 51 இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு உள்நாட்டிலும் மொத்தம் 52 பேருக்கு பணி ஒப்புதல் கடிதங்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு. அபின் தினேஷ் மொடாக் IPS அவர்கள் வழங்கினார்.
இந்த முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி அளித்து பின்னர் பணியமர்த்தப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.