
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை “காவல் கரங்கள்,மூலம் மீட்டு மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்த காவலர்
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) ஆய்வாளர் தலைமையில் TNHB காலனி, வில்லாபுரம் பகுதியை சேர்ந்த திரு. உத்தண்டன் 55/25, என்ற முதியவர் மனநலம் பாதித்து உறவினர்களால் கைவிடப்பட்டு சாலையோரம் தங்கி இருந்தவரை “காவல் கரங்கள்” மூலம் மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து தோப்பூர் MS செல்லமுத்து அறக்கட்டளை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு மற்றும் பயிற்சி இல்லத்தில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.
