Police Department News

ராஜபாளையம் அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம் அருகே காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தளவாய்புரம் அருகே உள்ள கூனாங்குலத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (28). கடந்த 2013ம் ஆண்டு காவலராக பணியில் சேர்ந்தார்.

ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவலராக பணியாற்றி வந்த காளிராஜ் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காவலர் காளிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில் தற்கொலை செய்துகொண்ட காளிராஜ் சிறுவயதிலிருந்து தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் நீண்ட நாளாக சிகிச்சை பெற்றும் குணம் அடையாததால் மனம் வெறுத்து குடிப்பழக்கத்திற்கு ஆளானதாகத் தெரிவித்தனர். மேலும் குடிப்பழக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதமாக பணிக்கு வராமல் இருந்த காளிராஜ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.