
தனியார் செய்தி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை மகனுக்கு அறிவால் வெட்டு என்று வெளியான தவறான செய்தியின் மீதான மதுரை மாநகர காவல் துறையின் மறுப்பு அறிக்கை
மதுரை மாநகர் ஜெயந்திபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சோலை அழகுபுரத்தில் உள்ள வெங்கட் அம்மாள் காம்பவுண்டில் குடியிருக்கும் பாண்டி என்பவரது மகன் கார்த்திக் வயது 36 என்பவருக்கும் பாண்டியின் தங்கை மகன் நாகரத்தினம் என்பவருக்கும் மேற்படி கார்த்திக் குடியிருந்து வரும் வீட்டில் சொத்துக்கள் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில் நாகரத்தினம் என்பவரின் தூண்டுதலின் பேரில் கார்த்திக் என்பவரின் வீட்டில் பொறுத்திருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தியும் தடுக்க வந்த கார்த்திகை
தாக்கியதாகவும் கார்த்திக் என்பவர் ஜெயந்திபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்ட மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த எதிரிகளான கண்ணன் என்பவரின் மகன் முத்துராமலிங்கம் வயது 19 அக்னி குமார் என்பவரது மகன்அருண் பாண்டி வயது 19 அர்ஜுனன் என்பவரது மகன் பாலமுருகன் வயது 20 பாண்டி என்பவரது மகன் ஆதீஸ்வரன் வயது 19 பொன்னையா என்பவரது மகன் நாகராஜ் வயது 18 மற்றும் செந்தில்ராஜ் என்பவரது மகன் சரவணகுமார் வயது 19 ஆகியோரை கைது செய்து தாக்குதலுக்கு பயன்படுத்தி ஆயுதங்களை கைப்பற்றி ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆகவே ஜெய்ஹிந்த் புரத்தில் கார்த்திக் என்பவருக்கும் அவரது மாமா நாகரத்தினம் என்பவருக்கு சொத்து பிரச்சனை இருந்து வந்த நிலையில் அவரது தூண்டுதலின் பேரில் கார்த்திக் என்பவரை ஆயுதங்களால் தாக்க வந்த எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் கஞ்சா விற்பனை குறித்து புகார் சொன்னதால் தந்தை மகனுக்கு வெட்டு என்ற தவறான வெளிவந்த செய்திக்கு மதுரை மாநகர காவல் துறை மறுப்பு அறிவிப்பு தெரிவித்துள்ளது.
