


மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கூடுதல் டி.ஜி.பி., போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் அவர்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் பிரேம் ஆனந்த் சின்ஹா மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் மதுரை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர துணை ஆணையர்கள் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் மதுரை விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு நிலை மற்றும் அதை பாராமரிப்பது குறித்து முன்னெச்சறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
