
51 கிலோ கஞ்சா கடத்தின வழக்கில் நான்கு பேருக்கு 10 வருடம் கடும்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்த மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றம்
கடந்த 13.10.2023. அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனை செய்து வந்தனர்.
அப்போது மதுரை மாநகர் கரிமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான நடராஜ் நகர், சுரேஷ் வீதி, பாண்டியம்மாள் தெரு சந்திப்பு அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமாக அந்த வழியே வந்த ஒரு காரை நிறுத்தும் போது காரில் இருந்தவர்கள் தப்பிக்க எத்தனித்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் அவர்கள் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் ஓட்டி வந்த காரில் மூன்று மூட்டைகள் கஞ்சா மொத்தம் 51 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தி வரப்பட்ட கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை கைப்பற்றி கஞ்சா கடத்தியவர்களையும் கைது செய்து மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கின் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன் நிலையில் சாட்சிகள் விசாரணை முடிவு பெற்று
எதிரிகள் மதுரை அச்சம்பத்து பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மகன் கண்ணதாசன் வயது 38, மதுரை தத்தனேரி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்ராஜ் வயது 30 அதே பகுதியை சேர்ந்த சந்திரமோகன் மகன் பாலகுரு வயது 33 மற்றும் மதுரை கேகே நகர் அய்யனார் கோயில் பகுதியைச் சேர்ந்த குமார் வயது 35 ஆகியோர் மீது
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட காரணத்தினால் மேற்படி நபர்களை குற்றவாளி என தீர்மானித்து மேற்படி நபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடும்காவல் சிறைத்தண்டனையும் தலா 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுத்த கரிமேடு காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்
