
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றி விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
22.07.25 அன்று காலை. ஆரப்பாளையம் பகுதியில் உள்ள புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வினை மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.தங்கமணி அவர்கள் வழங்கினார் இதில் குறிப்பாக பள்ளி மாணவர்கள் பேருந்து பயணத்தின் பொழுது எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என்பதனை பற்றியும் எவ்வாறு பயணிக்க கூடாது என்பதனை பற்றியும் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.பேருந்து பயணத்தின் பொழுது படிக்கட்டில் நின்று கொண்டுடோ தூங்கிக்கொண்டோ சென்றால் ஏற்படக்கூடிய விபரீதம் பற்றியும் அதன் பின்னர் அவரது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை எப்படி மாறும் என்பது பற்றியும் உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார்.நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து மாணவர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஒழுக்கமாக கவனமாக செல்வோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.. இதில் புனிதோ பிரிட்டோ மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை செல்வம் கரிமேடு போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் சந்தானகுமார் மற்றும் ஆண்டவர் ஆகியோர் கலந்து கொண்டனர்
